ரவி மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜீனி’ திரைப்படத்தின் 'அப்தி அப்தி' என்ற முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அறிமுக இயக்குநர் புவனேஷ் அர்ஜுன் இயக்கியுள்ள இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் வாமிகா கேபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.