பேட் கேர்ள் திரைப்படத்தின் முதல் பாடலான "ப்ளீஸ் என்ன அப்படி பாக்காதே" என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.இயக்குநர் வெற்றி மாறனின் உதவி இயக்குநர் வர்ஷா பரத் இயக்கியுள்ள இத்திரைப்படத்தை, வெற்றிமாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து தயாரித்துள்ளனர். அஞ்சலி சிவராமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கேபர் வாசுகி வரிகளில் மாளவிகா மனோஜ் இந்த பாடலை பாடியுள்ளார்.