அவதார் திரைப்படத்தின் முதல் பாகத்தை விட அதிக செலவில் ராமாயணம் திரைப்படம் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 1,600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் படம் உருவாவதாக கூறப்பட்ட நிலையில், 2 பாகங்களையும் சேர்ந்து 4 ஆயிரம் கோடியில் படம் உருவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி படத்தின் ஒரு பாகத்தின் பட்ஜெட் அவதார் படத்தின் முதல் பாகத்தின் பட்ஜெட்டை விட கூடுதல் என கூறப்படுகிறது.