ஜிவி பிரகாஷ்குமார் நடிக்கும் அடங்காதே திரைப்படம் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ஸ்ரீ கிரீன் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை சண்முகம் முத்துசாமி இயக்குகிறார். சரத்குமார் முக்கிய வேடத்திலும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கௌரவ வேடத்திலும் நடித்துள்ளனர்.