டோவினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘நரிவேட்டை’ திரைப்படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ் கிடைத்துள்ளது. உண்மை சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வரும் இந்த படத்தில், சுராஜ் வெஞ்சாரமூடு மற்றும் சேரன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியான நிலையில், மலைவாழ் மக்களுக்கு எதிராக காவல்துறையினர் மேற்கொள்ளும் அதிகாரத்தை கேள்வி கேட்கும்படியான காட்சிகள், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. அனுராஜ் மனோகர் இயக்கியுள்ள இந்த படம், வரும் 16ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.