நடிகர் ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்தில் நடித்தது தாம் செய்த மிகப்பெரிய தவறு என அமீர் கான் தெரிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பேசிய அவர், ரஜினிகாந்திற்க்காக கூலி படத்தில் கேமியோ கதாப்பாத்திரத்தை ஏற்றுக்கொண்டதாகவும், உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், தன் கதாபாத்திரம் என்னவென்று தனக்கே புரியவில்லை எனவும் தெரிவித்தார். தனது காதாப்பாத்திரத்திற்கு பெரிய எதிர்வினை கிடைக்கும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என தெரிவித்த அமீர் கான், எதிர்காலத்தில் மிகவும் கவனமாக இருப்பேன் என்றார்.இதையும் படியுங்கள் : இந்து துறவிகளை இழிவுப்படுத்தியதாக குற்றச்சாட்டு நடிகை வீட்டில் துப்பாக்கிச்சூடு