வாழை படத்தை இயக்கிய மாரி செல்வராஜை நேரில் அழைத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டியுள்ளார். விளிம்பு நிலை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையையும், வலிகளையும் அனுபவங்களின் வாயிலாக திரைமொழியில் பேசுகின்ற மாரி செல்வராஜின் கலை மென்மேலும் சிறக்கட்டும் என அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதற்கு நன்றி தெரிவித்துள்ள இயக்குனர் மாரி செல்வராஜ் வாழை திரைப்படத்தை ஓராண்டுக்கு முன்பே முதல் ஆளாய் பார்த்து பாராட்டியதோடு இன்று வாழை பெற்றிருக்கும் மாபெரும் வெற்றிக்காக நேரில் அழைத்து பாராட்டி கொண்டாடிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி என தெரிவித்துள்ளார். குறிப்பாக அவர் அளித்த குட்டி பரிசு பெரிய மகிழ்ச்சியை கொடுத்தததாகவும் கூறியுள்ளார்.