அதர்வா நடித்துள்ள 'தணல்' திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்கத்தில், த்ரில்லர் கதை களத்தில் கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனிடையே தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.