'தக் லைப்' திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே இணையத்தில் லீக்காகி இருப்பது படக்குழுவினர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 'தக் லைப்' திரைப்படம் சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என படக்குழு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், படத்தை இணையத்தில் வெளியிட நீதிமன்றம் தடை விதித்தது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவையும் மீறி படம் இணையத்தில் வெளியானதையடுத்து, லீக்கான படத்தை நீக்குவதற்கான சட்ட நடவடிக்கைகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.