தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் "விஸ்வாம்பரா" திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. சிரஞ்சீவியின் 156-ஆவது திரைப்படமான "விஸ்வம்பரா"வை இயக்குநர் மல்லிடி வசிஷ்டா இயக்க, எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ளார். இதில், திரிஷா, மிருணால் தாகுர் மற்றும் அஷிகா ரங்கனாத் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். பேன்டஸி ஜானரில் உருவாகும் இந்த படத்தை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.