நடிகை தமன்னா நடித்துள்ள ஒடேலா 2 படம் மூன்று நாட்களில் உலகளவில் 6 கோடியே 25 லட்ச ரூபாயை வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அசோக் தேஜா இயக்கத்தில் ஏப்ரல் 17 ஆம் தேதி படம் வெளியானது. 25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் படம் அதில் 50 சதவீதத்தை கூட வசூலிக்காது என்ற விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.