நடிகர் கமல் நடித்துள்ள தக் லைஃப் படத்தின் முதல் பாடலான ஜிங்குச்சா பாடல் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. கமல்ஹாசனின் வரிகளில் உருவான பாடல் ஏப்ரல் 18 ஆம் தேதி வெளியானது. கேங்ஸ்டர்ஸ் பின்னணியில் உருவாகியிருக்கும் படம் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகிறது. படத்தில் சிலம்பரசன், நாசர், திரிஷா முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.