காந்தாரா சாப்டர் 1 படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. இதுவரை இப்படம் ரூ.670 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது .ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்த இப்படத்தில் அவருடன் இணைந்து ருக்மிணி வசந்த், ஜெயராம், குல்ஷன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்நிலையில், இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக தான் சந்தித்த கஷ்டங்களை காண்பிக்கும் விதமாக அவர் சமூக ஊடகங்களில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில் உள்ள ரிஷப் ஷெட்டியின் வீங்கிய கால்கள், கிளைமாக்ஸ் காட்சிக்காக அவர் அனுபவித்த கடின உழைப்பு மற்றும் வலியின் கதையைச் சொல்கின்றன. இது குறித்து பதிவிட்டுள்ள ரிஷப் ஷெட்டி "இன்று,இவ்வளவு கடினப்பட்டு நாங்கள் எடுத்த Climax காட்சியை லட்சக்கணக்கான மக்கள் ரசிக்கும்போது மகிழ்ச்சியளிக்கிறது . இது நாங்கள் நம்பும் தெய்வீக சக்தியின் ஆசீர்வாதத்தால் மட்டுமே சாத்தியமானது. என்று உணர்ச்சி பொங்க பதிவிட்டுள்ளார்