சுஷாந்த் சிங்கை இருவர் சேர்ந்து கொலை செய்திருப்பதாக அவரது சகோதரி ஸ்வேதா சிங் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். தனக்கு தெரிந்த உளவியலாளர்கள் இருவர் இந்த தகவலை சொன்னதாக ஸ்வேதா கூறினார். சுஷாந்த் சிங்கின் மரணம் தற்கொலைதான் என அறிக்கை வெளியிட்டு சிபிஐ வழக்கை முடித்து வைத்தது குறிப்பிடத்தக்கது.