நடிகர் சூர்யா மற்றும் நடிகை பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியான ரெட்ரோ திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை 80 கோடி ரூபாய்க்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 1980களின் பின்னனியில் கேங்ஸ்டர் கதையாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் சூர்யாவின் திரைப்படங்களில் மிகப்பெரிய ஓடிடி ஒப்பந்தமாகும். இது தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் நெட்பிளிக்ஸில் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .