முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா புதிய தமிழ் திரைப்படம் மூலம் கதாநாயகனான அறிமுகமாக உள்ள நிலையில், அறிமுக விழாவில் பங்கேற்க தோனி சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டி.கே.எஸ். என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் சுரேஷ் ரெய்னாவை வைத்து புதிய படம் ஒன்றை தயாரிக்க உள்ளது. லோகன் இயக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, நடிகர்களை தேர்வு செய்யும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர்கள், நடிகைகள் அறிமுக விழாவிற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியை அழைப்பதற்கு படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.