"மாஸ் ஜதாரா" திரைப்படத்தின் சூப்பர் டூப்பர் பாடல் நாளை வெளியாக உள்ள நிலையில், அதன் புரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. பானு போகவரபு இயக்கத்தில், ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில், ரவி தேஜா கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் மூலம் நாகவம்சி மற்றும் சாய் சவுஜன்யா ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்த திரைப்படம் வரும் 31-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், "சூப்பர் டூப்பர்" பாடலை பீம்ஸ் சிசிரோலியோ மற்றும் ரோகினி சோரட் ஆகியோர் பாடியுள்ளனர்.