நடிகர்கள் குறித்து ஆபாசமான, அவதூறு கருத்துகளை பதிவிடும் பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்டோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தென்னிந்திய நடிகர் சங்கம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், தங்கள் உறுப்பினர்களான நடிகர்கள் குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவும், பொய் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட, சேகுவாரா என்ற புனைப்பெயர் கொண்ட ஜெய்சங்கர் என்பவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதே போல் பயில்வான் ரங்கநாதன் என்னும் நபர் உட்பட பலர், நடிகர்கள் மீது ஆதாரமற்ற அவதூறுகளை வாரி இறைத்து வருவதாகவும், அவர்கள் இந்த சட்ட விரோத செயலை நிறுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.