ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் வெப் சீரிஸின் 5வது சீசன் ரிலீஸ் தேதிகளை நெட்பிளிக்ஸ் அறிவித்தது. மொத்தம் 8 எபிசோட்கள் உள்ள நிலையில், முதல் நான்கு எபிசோட்கள் நவம்பர் 26 ஆம் தேதியும், அடுத்த மூன்று எபிசோட்கள் கிறிஸ்மஸ் முன்னிட்டு டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எட்டாவது மற்றும் இறுதி எபிசோட் 2026 ஆம் ஆண்டு வருட பிறப்பை முன்னிட்டு டிசம்பர் 31 மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.