நடிகை ஸ்ரீலீலா தனது முதல் பாலிவுட் படத்திலேயே முன்னணி நடிகையாக இருக்கும் ஆலியா பட்டுடன் பாக்ஸ் ஆபீஸில் மோத இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா, அனுராக் பாசு இயக்கத்தில் பாலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார். கார்த்திக் ஆர்யன் கதாநாயகனாக நடிக்கும் இந்த படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது டிசம்பர் 25 அன்று கிறிஸ்துமஸ் விருந்தாக வெளியிட படக்குழு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கிடையில், பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் திரில்லர் படமான Alpha திரைப்படமும் அதே தேதியில்தான் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.