சூரசம்ஹாரத்தை அனிமேஷன் திரைப்படமாக எடுத்தால் என்ன என்று சமூக வலைதளத்தில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அதற்கான வாய்ப்புகள் இருப்பதாக இயக்குநர் சௌந்தர்யா ரஜினிகாந்த் மறைமுகமாக கூறினார். கடந்த 2014ஆம் ஆண்டு சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான அனிமேஷன் திரைப்படமான கோச்சடையான் தான் இந்தியாவின் முதல் PHOTO REALISTIC MOTION CAPTURE FILM ஆகும். தமிழில் முருகனின் சூரசம்ஹாரத்தை அனிமேஷன் திரைப்படமாக எடுக்கும் பட்சத்தில் அது பிளாக்பஸ்டராக அமையும் என்றும், சன்பிக்சர்ஸ், ஏஜிஎஸ் போன்ற நிறுவனம் இத்திரைப்படத்தை எடுக்க முயற்சிக்கலாம் எனவும் சௌந்தர்யா ரஜினிகாந்த் கூறினார்.