10 ஆண்டுகளுக்கு பிறகு எஸ்.ஜே. சூர்யா இயக்கும் புதிய திரைப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது குறித்து நாளை அறிவிப்பு வெளியாகவுள்ளது. தனது கனவு படத்தை தாமே இயக்கி நடிக்க உள்ளதாக, எஸ்.ஜே.சூர்யா சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஸ்ரீ கோகுலம் மூவிஸ் தயாரிக்கும் இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா அளவில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் கதாநாயகியாக நடிகை பிரீத்தி அஸ்ரானி இணைந்திருக்கிறார்.இதையும் படியுங்கள் : ராஷ்மிகா நடிக்கும் "தி கேர்ள்பிரண்ட்" படத்தின் அப்டேட் ரிலீஸ் தேதி, பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் என அறிவிப்பு..!