நடிகர் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம், வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14ம் தேதி வெளியாகும் என படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 25-வது படமாக பராசக்தி திரைப்படம் உருவாகி உள்ளது. இதில் அதர்வா, ரவி மோகன் மற்றும் பசில் ஜோசஃப் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.