'பென்ஸ்' திரைப்பட பூஜையில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்ட நிலையில், இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ அதிகம் பகிரப்பட்டு வருகிறது. லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'பென்ஸ்' திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் பூஜையுடன் சென்னையில் தொடங்கியது. பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் பிரியங்கா மோகன், நிவின் பாலி மற்றும் மாதவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.