டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தின் இயக்குநர் அபிஜன் ஜீவிந், தயாரிப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினரை நேரில் அழைத்து நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ளார். சசிகுமார் நடிப்பில் கடந்த 1-ந் தேதி வெளியான 'டூரிஸ்ட் பேமலி' திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.