விக்ரம் வேதா பட இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது சிவகார்த்திகேயன் மதராஸி, பராசக்தி ஆகிய படங்களை அடுத்தடுத்த வெளியீடாக வைத்திருக்கிறார். தொடர்ந்து, குட் நைட் படம் இயக்குநர் விநாயக் சந்திரசேகர் படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.