வெற்றி மாறன் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் வட சென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து வெற்றி மாறன் வட சென்னை 2 திரைப்படத்தை இயக்கவிருப்பதாக தெரிகிறது. வெற்றி மாறன்-சிம்பு கூட்டணியில் எம்மாதிரியான திரைப்படம் உருவாகும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.