சித்தார்த் நடிப்பில் வெளியான 3 பிஎச்கே திரைப்படம் முதல் நாளில் ரூ. 1.5 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ள படத்தின் முக்கிய வேடத்தில் சரத்குமார், தேவயானி, மீதா ரகுநாத் ஆகியோர் நடித்துள்ளனர். 3 பிஎச்கே கொண்ட வீட்டை வாங்க ஆசைப்படும் மிடில் கிளாஸ் குடும்பத்தின் கதையாக படம் உருவாகியுள்ளது.