உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள (((Raebareli)) பாலிவுட் நடிகை திஷா பதானிக்கு சொந்தமான வீட்டின் முன், இருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்து துறவிகள் பிரேமானந்த் மகாராஜ், அனிருதாசார்யா மகாராஜ் ஆகியோரை இழிவுப்படுத்தியதற்காக திஷா பதானி வீடு மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக கூறியுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பொறுப்பேற்பதாக வீரேந்திர சரண், மகேந்திர சரண் ஆகியோர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். அந்த பதிவில், தங்களுடைய மதிப்பிற்குரிய துறவிகளை அவர் இழிவுப்படுத்தியதாகவும் இதுபோன்ற செயல்களில் மீண்டும் ஈடுபட்டால் உயிரோடு இருக்க முடியாது எனவும் மிரட்டல் விடுத்துள்ளனர்.