பாலிவுட் நடிகை ஷில்பா ஷிரோத்கர் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், தனக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறும், முகமூடிகளை அணியுமாறும் பதிவிட்டுள்ளார்.