பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிக்கும் 'கொம்புசீவி' என்ற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. நடிகர் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்தப்படம், 1996 ஆம் ஆண்டு வாக்கில் உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி பகுதிகளில் நடந்த சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.