ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், நெட்பிளிக்ஸில் வெளியாக இருக்கும் 'the bads of bollywood ' என்ற வெப் தொடரின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த வெப் தொடரின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. பாபி தியோல், லக்சயா, சாஹர் பம்பா, ராகவ் ஜுயால் மற்றும் மோனா சிங் ஆகியோர் இதில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மேலும், ஷாருக்கான், சல்மான் கான், ஆமிர் கான், ரன்பீர் கபூர், ரன்வீர் சிங், ஆலியா பட், சாரா அலிகான், இப்ராஹிம் அலிகான், எஸ்.எஸ். ராஜமவுலி மற்றும் கரண் ஜோஹர் ஆகியோர் கேமியோ ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது.