பிரபல WWE வீரர் ஜான் சீனாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்து, பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நெகிழ்ச்சி அடைந்துள்ளார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக இந்தியா வந்த ஜான் சீனாவை, நடிகர் ஷாருக்கான் சந்தித்தார். இது தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்துள்ள ஷாருக்கான், ஜான் சீனா ராக் ஸ்டார் என்றும், அவர் பணிவானவர் மற்றும் அன்பானவர் எனவும் புகழ்ந்துள்ளார்.