ஹாலிவுட் நடிகர்களை பின்னுக்கு தள்ளி பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உலகின் பணக்கார நடிகராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். எம்3எம் ஹுருன் இந்தியா ((m3m hurun india))பணக்காரர்கள் 2025 பட்டியலின்படி, பணக்கார நடிகர்களில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் பெயர் இடம்பெற்றுள்ளது. சுமார் 12 ஆயிரத்து 490 கோடி ரூபாய் சொத்து மதிப்பின் மூலம், பிரபல பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் மற்றும் பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் ஆகியோரை நடிகர் ஷாருக்கான் பின்னுக்கு தள்ளியுள்ளார்.