தனது பிறந்த நாளன்று இல்லம் முன்பு கட்டுக்கடங்காமல் குவிந்த ரசிகர்களை சந்திக்காமல் இருந்ததற்காக, பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டியிருக்கும் எக்ஸ் தள பதிவில், கூட்ட நெரிசல் ஏற்படலாம் என பாதுகாப்பு அதிகாரிகள் அறிவுறுத்தியதால், நம் ஒவ்வொருவரின் பாதுகாப்பு கருதியே சந்திக்க வெளியே வரவில்லை என விளக்கம் கொடுத்துள்ளார். மேலும் தம்மை பார்க்க முடியாமல் ரசிகர்கள் தவிப்பதை விட, தாம் உங்களை பார்க்க இயலாமல் போனது மிகுந்த வருத்தம் அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.