இயக்குநர் செல்வராகவனுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற இருப்பதாக, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தெரிவித்துள்ளார். செல்வராகவனுடன் இருக்கும் புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள ஜி.வி.பிரகாஷ், ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன படங்களுக்கு பின்னர், மீண்டும் ஒரு புதிய பயணத்தில் இணைந்திருப்பதாக பதிவிட்டுள்ளார்.