இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாக உள்ள திரைப்படத்தில் மூன்றாவது முறையாக நானி மற்றும் சாய் பல்லவி ஆகிய இருவரும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக எம்.சி.ஏ மற்றும் ஷ்யாம் சிங்கா ராய் ஆகிய படங்களில் நானியுடன் சாய் பல்லவி இணைந்து பணியாற்றியுள்ளார்.