நிவின் பாலி நடிக்கும் புதிய திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அகில் சத்யன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு சர்வம் மாயா என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நிவின் பாலியுடன் இணைந்து நடிகை ப்ரீத்தி முகுந்தன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இப்படம் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.