கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் சர்தார் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடிகைகள் மாளவிகா மோகனன் மற்றும் ஆஷிகா ரங்கநாதன் ஆகியோர் இணைந்துள்ளனர். பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கிய நிலையில், மாளவிகா மோகனன் மற்றும் ஆஷிகா ரங்கநாதன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.