பிரபல இந்தி பட இயக்குநர் ராஜ் நிடிமொரு உடனான காதலை, நடிகை சமந்தா கிட்டத்திட்ட உறுதிப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. சமந்தா, இயக்குனர் ராஜ் நிடிமோரு உடன் காதலில் இருப்பதாக நீண்ட காலமாக கிசுகிசுக்கப்பட்டு வரும் நிலையில், அவர்கள் ஜோடியாக வெளியில் செல்லும் போட்டோக்களையும் வெளியிட்டு வருகின்றனர். ஆனால் காதலை பற்றி சமந்தா தற்போது வரை வாய்திறக்காமல் உள்ள நிலையில், அவர் நிகழ்ச்சி ஒன்றில்ராஜ் நிடிமொரு உடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள், சமந்தா காதலை உறுதி செய்து இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.