பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள தி ராஜாசாப் திரைப்படத்தின் ’சஹானா சஹானா’ வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. ஃபீபுள் மீடியா பேக்டரி தயாரிப்பில், மாருதி இயக்கத்தில் தி ராஜா சாப் படத்தில் பிரபாஸ் நடித்து முடித்துள்ளார். தமன் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகவும் வரவேற்பைப் பெற்றது. ஃபேண்டசி கலந்த ஹாரர் கதையாக உருவாகியுள்ள இந்த படம் ஜனவரி 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.