டிடி பாலச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'லெனின் பாண்டியன்' திரைப்படத்தில் நடிகை ரோஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ளதன் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் கம் பேக் கொடுத்துள்ளார். ஆந்திராவில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ரோஜா ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு அரசியலில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெற்று திரைப்பட வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் 'லெனின் பாண்டியன்' படத்தில் ரோஜாவின் கதாபாத்திர வீடியோவை நடிகை குஷ்பு வெளியிட்டுள்ளார்.