பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களையும் இணைத்து Baahubali The Epic என்ற பெயரில் அக்டோபர் 31 ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்ய இருப்பதாக இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி அறிவித்தார். 2015 ஆம் ஆண்டு வெளியான பாகுபலி முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு அதன் இரண்டாம் பாகம் வெளியானது.