ரஜினியின் கூலி படத்தில் அமீர் கான் நடிக்கும் தாஹா கதாப்பாத்திரத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். தங்கக் கடத்தலை மையமாகக் கொண்டு உருவான இப்படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகும் நிலையில், இசை வெளியீட்டு விழா வரும் 27 ஆம் தேதி நடைபெறுகிறது. படத்தில் அமீர் கான், சத்யராஜ், ஃபகத் பாசில், நாகர்ஜூனா, உபேந்திரா, சௌபின் ஷாஹிர், சுருதி ஹாசன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.