பராசக்தி திரைப்படத்தில் ரவி மோகனின் கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், ரசிகர்கள் அளித்து வரும் அன்புக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், பராசக்தி படத்தில் திரு கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் கொடுத்து வரும் அன்பும் ஆதரவும் காரணமாக, தற்போது பல நல்ல உணர்வுகளை அனுபவித்து வருவதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் ரசிகர்களை மீண்டும், புதிய புதிய முயற்சிகளுடன் விரைவில் சந்திக்க வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.