ராஷ்மிகா மந்தனா நடிக்கும் 'தி கேர்ள்பிரண்ட்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. ராகுல் ரவிந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தீக்ஷித் ஷெட்டி கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்திற்கு ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். அல்லு அரவிந்த் வழங்கும் இப்படத்தை தீரஜ் மற்றும் வித்யா இணைந்து தயாரித்துள்ளனர்.