ராம்சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் படத்தின் 3வது பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் வரும் ஜனவரி 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டீசர் மற்றும் 2 பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றன. இந்த நிலையில், இப்படத்தின் 3வது பாடல் தொடர்பான புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், "நானா ஹைரானா" என்ற பாடல் இன்று வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.