பாலிவுட் நட்சத்திர ஜோடிகளான ராஜ்கும்மார் ராவ் மற்றும் பத்ரலேகா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. 2014 ஆம் ஆண்டு சிட்டிலைட்ஸ் திரைப்படத்தில் ஒன்றாக பணியாற்றியவர்கள், 7 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து 2021ம் ஆண்டு நவம்பரில் திருமணம் செய்து கொண்டனர். இன்று நான்காவது திருமண நாளை கொண்டாடி வரும் இந்த தம்பதி, தங்கள் மகளின் வருகை குறித்து அறிவித்துள்ளனர். திரையுலகினர், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.