வேட்டையன் திரைப்படம் இன்று வெளியாகிறது. ஞானவேல் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ஸ்ருதி ஹாசன், பகத் பாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள படத்தில் இடம்பெற்றுள்ள மனசிலாயோ பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், வேட்டையன் திரைப்படம் இன்று காலை 9 மணிக்கு தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் நிலையில், முதல் நாளான இன்று மட்டும் கூடுதல் காட்சி திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி காலை 9 மணிக்கு தொடங்கி இரவு 2 மணி வரை திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.