ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகும் 'கூலி' திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. நாளை இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, முதல் காட்சி 9 மணிக்கு தொடங்கி இறுதிக் காட்சி நள்ளிரவு 2 மணிக்கு முடியும் வகையில் 5 காட்சிகளை திரையிடலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.